FINANCE MINISTER

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

ஜி.எஸ்.டி வரி குறித்த சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று சென்னைக்கு வந்தனர்.
முன்னதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தை வணங்கிய அருண் ஜெட்லி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர். அதன்பின் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

Comments